பகீர் வீடியோ... புகாரளித்த இளைஞரை வீடு புகுந்து அடித்து, கத்திமுனையில் கடத்திச் சென்ற பெண் கேங்ஸ்டர்!
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்ல்பூர் மாவட்டத்தில் பெண் கேங்ஸ்டர் தன்னுடைய சட்ட விரோத செயல்கள் குறித்து காவல் நிலையத்தில் புகாரளித்த இளஞர் ஒருவரைத் தாக்கி, அடித்து துவைத்து கத்தி முனையில் தனது உதவியாளர்களுடன் கடத்திச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
குற்றம் சாட்டப்பட்ட பெண் ரவுடி மற்றும் அவரது கும்பலைச் சேர்ந்த சில இளைஞர்கள், பக்கத்து வீட்டில் வசித்து வரும் இளைஞரைத் தாக்கி, அடித்து துவைத்து ஒரு ஸ்கூட்டியில் கத்தி முனையில் அவரைக் கடத்தி செல்கின்றனர். இது குறித்த புகாரில் போலீசார் அந்த பெண்ணையும், அவளது உதவியாளர்களையும் கைது செய்து ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர்.
அந்த பெண் கேங்ஸ்டர் தனது இடத்தில் நடந்ததாகக் கூறப்படும் சட்டவிரோத செயல்களுக்கு பக்கத்து வீட்டில் வசித்து வரும் இளைஞர் ஆட்சேபனை தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் முழுவதும் சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
தகவலின் படி, இந்த சம்பவம் ஜபல்பூரில் உள்ள கோரக்பூரில் உள்ள ஒரு கிறிஸ்தவ பகுதியில் பதிவாகியுள்ளது. பிஹு விஸ்வகர்மா என்ற பெண் தாதா இந்த பகுதியில் வசித்து வருகிறார். அவளது வசிப்பிடம் குற்றவாளிகள் மற்றும் குண்டர்களின் மையமாக மாறிவிட்டதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, பக்கத்து வீட்டுக்காரர் மனோஜ் சர்மா, இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் குடியிருப்பு சூழலை மாசுபடுத்துவதாக புகார் கூறியுள்ளார். இது விஸ்வகர்மாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அவள், தனது இளைஞர் கும்பலுடன், மனோஜ் சர்மா இல்லத்தை அடைந்து, சர்மாவைத் தாக்கி, கடத்திச் சென்றாள்.
இந்த வீடியோ வைரலானதை அடுத்து, பிஹு விஸ்வகர்மா, விக்கி சோன்கர் மற்றும் அவர்களது உதவியாளர்கள் மூவரையும் காதா போலீசார் கைது செய்தனர். அப்பகுதியில் இனி மக்கள் அச்சமோ பயமோ கொள்ள தேவையில்லை என்பதை உறுதிப்படுத்தும் விதமாக அந்த பெண்ணையும், அவளது கும்பலையில் ரோட்டில் போலீசார் ஊர்வலமாக விலங்கிட்டு அழைத்துச் சென்றனர்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!