undefined

 பகீர் வீடியோ... பாலத்தில் இருந்து திடீரென ஆற்றில் பாய்ந்த கார்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி!

 
மகாராஷ்டிர மாநிலம் சாங்லி மாவட்டத்தில் கிருஷ்ணா ஆற்றில் பாலத்தில் சென்றுக் கொண்டிருந்த கார் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், ஆற்றில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சாங்லியில் வசிக்கும் கேடேகர்கள் மற்றும் நர்வேகர்கள் என்ற இரு குடும்பங்கள் கோலப்பூரில் நடந்த திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு விட்டு, வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் பாலத்தில் வந்துக் கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த நிலையில் கார் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

<a href=https://youtube.com/embed/8e4TOUGuvWQ?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/8e4TOUGuvWQ/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" title="YouTube video player" width="560">

கிருஷ்ணா ஆற்றில் இரண்டு பாலங்கள் உள்ளன. பழைய பாலத்தின் வழியாக கார் சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் இரண்டு பாலங்களுக்கு இடையே விழுந்ததாக போலீசார் தெரிவித்தனர். 

இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பிரசாத் பால்சந்திர கெடேகர் (35), அவரது மனைவி பிரேரனா (36) மற்றும் வைஷ்ணவி சந்தோஷ் நர்வேகர் (21) ஆகியோர் உயிரிழந்துள்ளனர். காரில் இருந்த சமர்ஜீத் பிரசாத் கேடேகர் (7), வரத் சந்தோஷ் நர்வேகர் (19), சாக்ஷி சந்தோஷ் நர்வேகர் (42) ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!