பகீர் வீடியோ.. கார் இன்ஜினில் பதுங்கி இருந்த 6அடி மலைப்பாம்பு.. பதறிய கார் ஓனர்..!!
Oct 27, 2023, 19:45 IST
கார் இன்ஜினில் 6 அடி நீள மலை பாம்பு மறைந்திருந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
தெற்கு டெல்லியிலுள்ள சித்தரஞ்சன் பார்க் பகுதியில் வசித்து வரும் நபர், வழக்கம் போல தனது காரை சுத்தம் செய்து கொண்டிருந்த போது, காரின் உள்ளே 6 அடி நீள மலைப்பாம்பு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே அவர் டெல்லியைச் சேர்ந்த வன உயிர் மீட்பு நிறுவனத்திற்கு போன் செய்துள்ளார்.
6 அடி நீளம் கொண்ட இந்த மலைப்பம்பு எப்படி காரின் இஞ்சின் பகுதிக்குள் சென்றது என தெரியவில்லை. பாம்பு பிடிப்பதில் திறமையான இக்குழுவினர் அரை மணி நேரம் கடுமையான முயற்சிக்குப் பிறகு வெற்றிகரமாக பாம்பை பிடித்தனர். இந்த மலைப்பாம்பு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்கள்