undefined

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு.. வரலாறு காணாத அளவுக்கு சரிவு!

 

சர்வதேச அந்நியச் செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. அதன்படி, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 1 பைசா சரிந்து வரலாறு காணாத வகையில் ரூ.84.40 ஆக உள்ளது. நேற்று டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ.84.385 ஆக இருந்தது, இன்று ரூ.84.40 ஆக சரிந்துள்ளது.

வெளிநாட்டு நிதி வெளியேற்றம் மற்றும் அமெரிக்க கரன்சியின் மதிப்பு உயர்வு போன்ற காரணங்களால் தொடர்ந்து 10வது நாளாக ரூபாயின் மதிப்பு சரிந்தது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்க முடிவு செய்ததே இதற்குக் காரணம் என்கின்றனர் அந்நிய செலாவணி வர்த்தகர்கள். இந்திய ரிசர்வ் வங்கி கடந்த காலங்களில் ரூபாய் மதிப்பை நிலைநிறுத்த அந்நியச் செலாவணி சந்தையில் தலையிட்டது.

அதேபோல் அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ந்து வலுப்பெறும் பட்சத்தில் இந்த முறையும் ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க தேர்தலில் டொனால்ட் டிரம்பின் வெற்றி இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு மாறாக இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!