undefined

இளம்பெண்ணை காதலில் சிக்க வைத்து ஏமாற்றிய இரட்டையர்கள்.. நிர்வாண வீடியோவை வைத்து மிரட்டிய கொடூரம்!

 

கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், நீலம்பூர் அருகேயுள்ள சந்தக்குன்னு பகுதியைச் சேர்ந்தவர்கள் அசைனார் மற்றும் உசேன். இளம் பெண்களை காதல் வலையில் சிக்க வைக்க இந்த இரட்டையர்கள் போட்டி போட்டு வருகின்றனர். இந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண் மீது அசைனாரின் பார்வை விழுந்துள்ளது. இருவரும் காதலித்து வந்துள்ளனர். உசைனும் அதே இளம் பெண்ணை குறிவைத்துள்ளார். உசைன் தோற்றத்தில் ஒரே மாதிரியாக நடந்து கொண்டதால் அந்த இளம்பெண் உசைனை அசைனார்  என நினைத்து காதலித்து வந்துள்ளார்.

பெண்ணுடன் இரட்டையர்கள் தினமும் இரவு  வீடியோ கால்களில் பேசி வந்துள்ளனர். ஒரு நாள் அசைனார் ஒரு இளம் பெண்ணுக்கு வீடியோ கால் செய்து, நாம் தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம், வீடியோ அழைப்பில் நிர்வாணமாக பேசலாமா என்று கேட்டார். காதல் மயக்கத்தில் இருந்த இளம்பெண், நிர்வாணமாக அசைனார் முன் வீடியோவில் வந்துள்ளார்.  பின்னர் அந்த வீடியோவை இரட்டை சகோதரர்கள் பதிவு செய்துள்ளனர்.

பின்னர், இருவரும் வீடியோவை காட்டி, தங்கள் விருப்பத்திற்கு இணங்குமாறு பெண்ணை மிரட்டியுள்ளனர். ஆனால் சிறுமி மறுத்ததால், அந்த நிர்வாண வீடியோ சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். இது குறித்து அந்த பெண் எடக்கரை போலீசில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், அசைனார் , உசேன் ஆகிய இரட்டையர்களை நேற்று கைது செய்தனர். இருவரும் மஞ்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!