undefined

படியில் பயணித்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. நொடி பொழுதில் ஓடும் பேருந்தில் இருந்து விழுந்த கொடூரம்!

 

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கடமலைக்குண்டு பகுதியை சேர்ந்தவர் தீபலட்சுமி. இவர் நேற்று மதியம் தனியார் பஸ்சில் தேனிக்கு சென்றார். அப்போது, ​​படிக்கட்டு அருகே கம்பியை பிடித்துக் கொண்டு பயணித்தார். அந்த பெண் கண்டக்டரிடம் டிக்கெட்டை பெற்று தனது கைப்பையில் வைத்து கொண்டிருந்த போது, ​​எதிர்பாராதவிதமாக தவறி சாலையில் விழுந்தார்.

இதை கவனித்த டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தினார். இதையடுத்து பேருந்தில் இருந்த பயணிகள் கீழே இறங்கி ஓடி அந்த பெண்ணை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவரது பெயர் தீபலட்சுமி, கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில், பேருந்தில் இருந்து தீபலட்சுமி கீழே விழுந்த சிசிடிவி காட்சிகளும், கீழே விழுந்த சிறுமியை காப்பாற்ற கண்டக்டர் முயற்சிக்கும் சிசிடிவி காட்சிகளும் தற்போது வெளியாகியுள்ளன. விபத்து குறித்து கடமலைக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!