undefined

தொடரும் சோகம்... பள்ளி மாணவனைக் கடித்து குதறிய வெறிநாய்.. மருத்துவமனையில் அனுமதி!

 

தமிழகம் முழுவதும் தெருநாய்க்கடிக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் திருப்பத்தூரில் பள்ளிக்கு சென்றுக் கொண்டிருந்த மாணவனை வெறிநாய் கடித்துக் குதறியதில் படுகாயமடைந்த நிலையில், மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஹாரிப் நகர் பகுதியை சேர்ந்த தாஹித் என்பவரின் மகன் அத்திக் ( 7). சிறுவன் திருப்பத்தூர் 12 வது வார்டு ராஜன்தெரு பகுதியில் உள்ள உஸ்மானியா பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறான். இந்த நிலையில் நேற்று காலை சிறுவன் அத்திக் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுள்ளான். பின்னர் பள்ளி அருகாமையில் உள்ள கடைக்கு சென்று சாக்லேட் வாங்கிக் கொண்டு மீண்டும் பள்ளிக்கு உள்ளே சென்றபோது வீதியில் சுற்றித் திரிந்த வெறிநாய் ஒன்று சிறுவன் அத்திக்கை கடித்துள்ளது. 

பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் அந்த சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். தற்போது அந்த சிறுவன் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றான். மேலும் அந்த பகுதியில் ஏராளமான நாய்கள் சுற்றி திரிவதாகவும் இதன் காரணமாக அவ்வழியாக செல்லகூடிய குழந்தைகளும், பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகுந்த அச்சத்துடனும் பயணித்து வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

மேலும் இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தும், மனுஅளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதிமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் இனியாவது நகராட்சி நிர்வாகம் இதை கவனத்தில் கொண்டு உடனடியாக விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் பள்ளிக்கு சென்ற சிறுவனை வெறிநாய் கடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா