தொடரும் சோகம்!! சென்னை ஐஐடி மாணவர் தற்கொலை!!

 

ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. இவர்கள் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வருகின்றனர். இதிலிருந்து இவர்களை விடுவிக்க கவுன்சிலிங்க் கொடுக்கப்பட்டு வருகிறது. இருந்த போதிலும் தொடர் தற்கொலைகளை தடுக்க முடியவில்லை என ஐஐடி நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. சென்னை கோட்டூர் புறத்தில் செயல்பட்டு வருகிறது  ஐஐடி வளாகத்தின் ஆண்கள் விடுதி. இதில் பி.டெக் 3ம் ஆண்டு படித்துவரும் மாணவர் புஷ்பக். இவரின் அறைக் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படவில்லை.

இதனால் சக மாணவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மாணவன் புஷ்பக் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த மாணவர்கள் விடுதி நிர்வாகத்திடம் தெரிவிக்க உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது . சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர்  புஷ்பக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

 


கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஏற்கனவே 2 மாணவர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. தொடர் மனஅழுத்தத்தால் இந்த தற்கொலைகள் ஏற்படுகிறதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பிரச்சனைகளை மாணவர்கள் வெளிப்படுத்ததால் தற்கொலைகளை தடுக்க முடியவில்லை என ஐஐடி நிர்வாகம் கவலை தெரிவித்துள்ளது. பொருளாதாரம், குடும்பப்பிரச்சனை, மன அழுத்தம்  காரணமாகவே மாணவர்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர். மாணவர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் தொடர்ந்து கவுன்சிலிங் அளிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த தற்கொலைகள்  மிகுந்த மன வருத்தத்தை அளிப்பதாக  ஐஐடி நிர்வாகம் கூறுகிறது.  விரைவில் இந்த மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை வெளியிடப்படும் என ஐஐடி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!