undefined

  அதிர்ச்சி... பள்ளியில் பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியர் மயங்கி சரிந்து உயிரிழப்பு...!

 


 
 
ஈரோடு மாவட்டம் அந்தியூர்  பர்கூர் மலைப்பகுதி சுண்டப்பூர் மலை கிராமத்தில் செயல்பட்டு வருகிறது  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி. இந்தப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிபவர் அந்தோணி ஜெரால்ட் .49 வயதாகும் இவர்  வழக்கம்போல் இன்றும் பள்ளிக்கு வருகை தந்தார். மதிய உணவு இடைவேளை நேரத்தில் சாப்பிட்டதும்  வகுப்பு சென்று மாணவர்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்துள்ளார்.

தொடர்ந்து அங்கிருந்து சேரில் அமர்ந்தவர் அப்படியே மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். மாணவர்கள் பதறியடித்து அருகில் இருந்த ஆசிரியர்களிடம் கூறினர். இதன் பேரில் உடனடியாக அவரை மீட்டு  மற்ற ஆசிரியர்கள்  காரில் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.அதே சமயத்தில் வந்த 108 ஆம்புலன்ஸ்  ஊழியர்கள் காரில் இருந்த ஆசிரியர் அந்தோணி ஜெரால்டை பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாகத் தெரிவித்தனர்.  

இச்சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் அவரது உடலை மீட்டு  பிரேதப் பரிசோதனைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து  வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . 
 பள்ளியில் பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியர் மாரடைப்பில் உயிரிழந்த  சம்பவம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!