undefined

பள்ளி மாணவர்களை  கால் அமுக்கி விட சொன்ன ஆசிரியர் சஸ்பெண்ட்!

 

 சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு மேல்நிலை பள்ளி கிழக்கு ராஜபாளையம் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில்  கணித ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் ஜெயப்பிரகாஷ். இவர் கால் வலிப்பதால்  பள்ளி மாணவர்களை கால் அழுத்திவிட கூறியதாக தெரிகிறது.

இதனை அடுத்து மாணவர்கள் அவருக்கு கால் அழுத்தி விட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.  இதனையடுத்து, சேலம் மாவட்ட தலைமை கல்வி அலுவலர் ஷபீர், ஆசிரியர் ஜெயப்பிரகாஷை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 இச்சம்பவம் குறித்து நேரில் விளக்கம் அளிக்க வேண்டும் எனக் கூறி ஆசிரியர் ஜெயப்பிரகாஷிற்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!