undefined

மாணவியும் சிக்கிய கொடூரம்... காலேஜ் பசங்க தான் டார்கெட்... கஞ்சா ஆயில், மாத்திரை.. ஊசி, சாக்லேட்.. எஸ்.ஆர்.எம். கல்லூரி் அருகே என்ன தான் நடக்குது?!

 

நேற்று காலை சுமார் 1000 போலீசார் சென்னை பொத்தேரி எஸ்.ஆர்.எம். கல்லூரி அருகே உள்ள 600 குடியிருப்புகளைக் கொண்ட பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். இந்த பகுதியில் பல வருடங்களாகவே கஞ்சா புழக்கம் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. கல்லூரி மாணவர்கள் தான் டார்கெட். எஸ்.ஆர்.எம். கல்லூரிக்கு அருகில் இருப்பதால் பெரும்பாலான மாணவர்கள்,  மாணவிகள் இந்த பகுதியில் வீடு எடுத்து தங்கியிருந்து படித்து வருகின்றனர்.

வெளியே கசியாத விஷயமாக கஞ்சா போதை மட்டுமல்லாமல், விபச்சாரத் தொழிலும் இந்த பகுதிகளில் அதிகரித்து எந்தவிதமான இடையூறும் இல்லாமல் நடைபெற்று வருவதாக கூறுகிறார்கள் அப்பகுதி பொதுமக்கள். அடித்தடி, கட்டப்பஞ்சாயத்து, போதைப் பொருட்கள், விபச்சாரம், ஆள்கடத்தல் என்று அத்தனைக் குற்றச்செயல்களுமே இப்பகுதியில் சகஜமாக நடைபெற்று வருகிறது. இவர்களுக்கு பணக்கார வீட்டு பிள்ளைகளான கல்லூரி மாணவர்கள் தான் டார்கெட் என்கிறார்கள். தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா என இந்தியா முழுவதும் இருந்தும், நைஜீரியா, மலேசியா, இந்தோனேசியா இலங்கை என  பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் இந்த பகுதியில் தங்கி இருந்து படித்து வருகின்றனர்.

 
இந்நிலையில், நேற்று அதிகாலையிலேயே திடீரென இந்த கல்லூரி வளாகத்தில் 1000க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டதால் அப்பகுதியே பரபரப்பானது. இதனையடுத்து தனியார் கல்லூரியில்  சுற்றியுள்ள வீடுதிகளிலும் திடீர் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.அத்துடன் அப்பகுதியில் அடுக்குமாடியில் குடியிருக்கும் நபர்கள் மற்றும் இருசக்கர வாகனம் வைத்திருந்தாலும் அதிலும் என்னென்ன வைத்திருக்கிறார்கள் என்பது குறித்த  சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் வெளி நபர்கள் உள்ளே செல்லும் போது அவர்கள் என்ன வைத்திருக்கிறார்கள் என்பது குறித்தும் சோதனை நடைபெறுகிறது. பெருமளவு கஞ்சா புழக்கம் இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் விடுதிகளில் இந்த சோதனை நடைபெறுவதாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.  

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியை சுற்றியுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கியுள்ள விடுதிகளில், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கம் பெருமளவில் இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில்சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. இந்த சோதனையில், போதை மாத்திரைகள், கஞ்சாவுக்கு பயன்படுத்தக்கூடிய போதை பொருட்கள், பாங்கு போதை வஸ்து   பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். போதை ஆயில், கஞ்சா சாக்லேட்கள் பெருமளவு கைபற்றப்பட்டுள்ளது.

கல்லூரியைச் சேர்ந்த மாணவி உட்பட 16 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த பிரபல ரெளடியையும் போலீசார் கைது செய்துள்ளதாக கூறியுள்ள நிலையில், கைது செய்யப்பட்ட அந்த பிரபல ரெளடிக்கு வயது 29. தமிழகம் போதையில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது என்று கூறினால் ஆளுங்கட்சியினருக்கு கோபம் வருகிறது. எதிர்கட்சியினரும் இதைக் கண்டுக் கொள்வதில்லை. கவர்னரும், பாஜக அண்ணாமலையும் மட்டுமே இது குறித்து அவ்வப்போது கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அரசியல் லாபத்திற்காக ஆட்சியாளர்களோ, அரசியல் கட்சித் தலைவர்களோ எப்படியோ போகட்டும். பெற்றோர்கள் உங்கள் பிள்ளைகளை இந்த போதையின் பிடியில் இருந்து காப்பாற்றிக் கொள்ளுங்க. மனம் விட்டு உங்கள் குழந்தைகளிடம் பேசுங்க. அவர்களோடு நேரம் செலவிடுங்க.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா