புயல் சின்னம் உருவானது... நாளை சென்னை உட்பட இந்த மாவட்டங்களில் கனமழை... பத்திரம் மக்களே!
தென்மேற்கு வங்கக்கடலில் புயல் சின்னம் (புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி) உருவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இந்த புயல் சின்னம் அடுத்து வரும் 2 நாள்களில் மேற்கு திசையில், தமிழக - இலங்கை கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதே போன்று நாளை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள், சிறுவர்கள், கர்ப்பிணிகள், முதியவர்களை மழைக்காலங்களில் தேவையில்லாமல் வீட்டை விட்டு தனியே வெளியே அனுப்பாதீங்க. அதே சமயம் மழைக்காலங்களில் மின் சாதனங்களை மிகவும் கவனமுடனும், பாதுகாப்புடனும் கையாளுங்க. நீர் நிலைப் பகுதிகளுக்கு அவசியமில்லாமல் செல்லாதீங்க. பத்திரம் மக்களே... பாதுகாப்பாக இருங்க.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!