undefined

புயல் சின்னமாக வலுவடையலாம்... தமிழகத்தில் நவ.11ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு... நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு!

 
நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி புயல் சின்னமாக வலுவடையலாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் தாக்கத்தால் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நாளை நவம்பர் 7ம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்கிழக்கு வங்கக்கடலில் அந்தமான் தீவுகள் அருகே இன்று புதிதாக வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகலாம். அதன் தாக்கத்தால் அப்பகுதியில் வரும் நவம்பர் 7ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. 

இது 40 சதவீதம் நவம்பர் 7ம் தேதி முதல் நவம்பர் 11ம் தேதி வரையிலான நாட்களில் புயல் சின்னமாக வலுவடைந்து தமிழக கரையை நெருங்கலாம். தற்போதைய நிலவரப்படி இந்த நிகழ்வுக்கு 40 சதவீதம் மட்டுமே சாத்தியக்கூறுகள் உள்ளன.

இதே காலகட்டத்தில், தென்மேற்கு வங்கக் கடலில், தமிழகம் மற்றும் இலங்கை கடலோர பகுதிகளில், புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாவதற்கான சாத்தியக் கூறுகளும் காணப்படுகின்றன. இதனால், தமிழகம், தெற்கு ஆந்திரா, கேரள பகுதிகளில் வரும் நவம்பர் 7ம் தேதி முதல் நவம்பர் 11 ம் தேதி வரையிலான நாட்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!