பறவைகளின் எச்சங்களில்  இளமையை கூட்டும்  சூப் ... சீனாவில் விநோதம்!

 

சர்வதேச நாடுகளில் சீனாவில் தான் பாம்பு பல்லி பூரான் தொடங்கி எல்லாவற்றையும் உணவில் சேர்த்துக் கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்..  அனைத்தையும் ஒரு பிடி பிடித்து விடுகின்றனர். அந்த வகையில் தற்போது பறவையின் எச்சங்களையும் விடுவதில்லை. அதனையும் சூப்பாக்கி குடித்து விடுகின்றனர். பறவையின் உமிழ்நீர் நிரம்பிய கூட்டில் இருந்து தயாரிக்கப்படும் சூப்பைச் சுவைக்க சீன மக்கள் ஆர்வமாக உள்ளனர். ஸ்விஃப்லெட் என்ற சிறிய சீனப் பறவையின் கூடுகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட இந்த சூப், பாரம்பரிய சீன மருத்துவக் குறிப்புகளின்படி, தோலைப் பாதுகாக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் வயதான தோற்றத்தைக் கட்டுப்படுத்த உதவும் என்று கூறப்படுகிறது.

இப்போது சமூக ஊடகங்களின் ஆதிக்கத்தால், பறவை உமிழ்நீர் சூப் உலகம் முழுவதும் அறியப்பட்டு கவனம் செலுத்துகிறது.வெறும் 500 கிராம் காய்ந்த பறவைக் கூடு ரூ.1.6 லட்சத்துக்கு விற்கப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.  சீனாவின் பழமையான மற்றும் சுவையான உணவாகக் கருதப்படும் பறவைக் கூடு சூப் சமூக ஊடகங்களில் பிரபலமாகி வருகிறது.

சமீபத்தில் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் திறனுக்காக அழகு துறையில் பிரபலமடைந்துள்ளது. மலேசியா, தாய்லாந்து போன்ற பல இடங்களில் மக்கள் தங்கள் கூடுகளை சேகரிக்க ஸ்விப்லெட் பண்ணைகளை ஆரம்பித்துள்ளனர். இதில், அதிக வருவாய் கிடைப்பதால், காலி வீடுகளை, ஸ்விப்ட்லெட் வீடுகளாக மாற்றி, பண்ணையாக பயன்படுத்துகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!