ரத்த நிறத்தில் மாறும் வானம்.. மொத்தமாக அழியும் காசா..!!

 

இஸ்ரேல் - காஸா இடையே நடந்து வரும் போரில், காஸா பகுதி மீது தொடர்ந்து ஏவுகணை தாக்குதலையும், குண்டு மழையையும் பொழிந்து வருகிறது இஸ்ரேல். முதல்நாள் தாக்குதலில் இஸ்ரேலைச் சேர்ந்த 1,400 பேர் பலியான நிலையில், ஹமாஸை முழுமையாக அழிப்போம் என்று சபதமெடுத்து காஸா மீது கோர தாக்குதலை தொடர்ந்து வருகிறது.

இஸ்ரேல் அரசு. ஹாமாசை ஒட்டுமொத்தமாக ஒழிக்க நிலி என்ற தனிக்குழு ஒன்றையும் சமீபத்தில் உருவாக்கியிருந்தது இஸ்ரேல். 20 நாட்களை கடந்துள்ள இந்த போரில், உட்சபட்சமாக சாதரண பொதுமக்களையும் பொருட்படுத்தாமல், உலகத்தின் தொலைத்தொடர்புகள் அனைத்தும் இன்று முடக்கப்பட்டுள்ள சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்புலன்சுக்கு கூட அழைக்க முடியாமலும், அருகில் இருப்பவர்களிடம் கூட பேச முடியாமலும், வானம் முழுவதுமே குண்டுகள் துளைத்தலால் சிகப்பாக மாறி காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.