undefined

திருமண நேரத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. மாமனாருக்கு வந்த மணப்பெண்ணின் ஆபாச வீடியோ!

 

ராஜஸ்தான் மாநிலம் சூரத்தை சேர்ந்த 23 வயது இளம்பெண்ணுக்கு கடந்த 10ம் தேதி வாலிபர் ஒருவருக்கு திருமணம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், திருமணத்திற்கு முன்பு மணமகள் வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருப்பதாகக் கூறி மணமகனின் தந்தை திருமணத்தை நிறுத்தினார். இதனால் மனமுடைந்த மணப்பெண்ணின் தாத்தா, பேத்தியிடம் விசாரித்தார்.

சூரத்தில் உள்ள கல்லூரியில் படிக்கும் போது ஜீஷன் என்ற நபர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் கூறினார். மேலும், சம்பவத்தை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து, பெண்ணை மிரட்டி, பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று, தகாத உடலுறவுக்கு உள்ளாக்கியுள்ளார். இதனால் மனமுடைந்த அப்பெண், ஜீஷனுடனான தொடர்பை துண்டித்துவிட்டு வேறு திருமணத்திற்கு ஒப்புக்கொண்டார்.

ஆனால், ஜீஷன் பலமுறை போன் செய்து வேறு எங்கும் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என மிரட்டியுள்ளார். இந்த நேரத்தில் தான் மணமகனின் தந்தைக்கு ஆபாச வீடியோவை அனுப்பியுள்ளார். வீடியோவை பார்த்த மணமகனின் பெற்றோர் திருமணத்தை நிறுத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக ஜீஷன் மீது சிறுமி போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் ஜீஷன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!