undefined

அதிர்ச்சி வீடியோ...  மேற்கூரை இடிந்து விழுந்து விமான நிலையத்திற்குள் அருவி போல் மழை நீர்!

 

 அஸ்ஸாமில் கௌகாத்தி நகரில்  லோக்ப்ரியா கோபிநாத் பர்தோலாய் சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின்  தனியார் மய திட்டத்தின் கீழ் இந்த விமான நிலையம் அதானி குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு முதல் அதானி நிறுவனம் இந்த விமான நிலையத்தை இயக்கி, பராமரித்து  கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

இந்நிலையில் நேற்று மார்ச் 31ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மிகக் கடுமையான கனமழை பெய்தது. இந்த மழையுடன் சூறாவளியும் சேர்ந்ததால் இப்பகுதிகளில் 500 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே நேரத்தில் கௌகாத்தியில்  விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. கூரையில் இருந்து பல இடங்களில் தண்ணீர் அருவி போல் கொட்டியது. திடீரென மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததால் விமானத்திற்காக காத்திருந்த பயணிகள் அச்சம் அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக  அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த பயணிகள்   உயிர் தப்பினர்.


மேற்கூரை இடிந்து விழுவதும், கூரையில் இருந்து மழை நீர் அருவி போல் கொட்டும் வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. சரியான பராமரிப்பு இல்லாததால்தான் விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுந்ததாக சமூக வலைதளங்களில் பயணிகள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்