undefined

விடிய விடிய கொட்டித் தீர்த்த மழை... மக்களே பத்திரம்... இன்றும் கனமழைக்கு வாய்ப்பு!

 
தென்மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும், வடகிழக்கு பருவமழை காரணமாக நேற்றிரவு முதல் விடிய விடிய மழை கொட்டித் தீர்த்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் மழை அதிகளவு பெய்துள்ளது. தென் தமிழகத்தில் கடந்த 2 நாட்களாகவே மழை மிரட்டி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு விடிய விடிய ராமநாதபுரம், தஞ்சை, நெல்லை, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் மழை பெய்து வந்த நிலையில் இன்றும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து  இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இன்று தென்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் மக்கள் அவசியமில்லாமல் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக நேற்று இரவு முதல் தென்தமிழக மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதில் சில இடங்களில் கனமழை பெய்த நிலையில் பலஇடங்களில் தொடர்ந்து லேசானது முதல் மிதமானது வரை மழை என்பது பெய்து வருகிறது. மீனவர்கள்  மறு உத்தரவு வரும் வரை கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!