என் புருஷனுக்கு ஏதாவது ஆச்சுன்னா .. நீங்க தான் காரணம்.. போலீஸ் மனைவி வீடியோ வைரல்..!!
விடுமுறை அளிக்காததன் காரணமாக போக்குவரத்து காவலர் மயங்கி விழுந்ததாக காவலரின் மனைவி குற்றம் சாட்டியுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் உதகையில் போக்குவரத்து காவலராக கலையரசன் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தனக்கு உடல் நிலை சரியில்லை என்று போக்குவரத்து ஆய்வாளரிடம் விடுமுறை கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அவர் விடுப்பு அளிக்காததால் டிஎஸ்பி இடம் சென்று முறையிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவரும் விடுமுறை தராமல் திருப்பி அனுப்பிய நிலையில் மாத்திரையை சாப்பிட்டு விட்டு பணிக்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாரத விதமாக மயங்கி கலையரசன் விழுந்துள்ளார் .
இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், அவருக்கு அருகில் அமர்ந்திருந்த மனைவி வீடியோ ஒன்றில் பேசி அதை வெளியிட்டுள்ளார். அதில் காவலர்களுக்கும் வார விடுமுறை அளிக்க வேண்டும் என முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்தது மட்டுமின்றி, கணவரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு இந்த மூவர் தான் காரணம் என கூறி சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட நிலையில், வீடியோ வைரலானது.
இந்நிலையில், காவலர்களுக்கு வார விடுப்பு அளிக்கப்பட்டது தெரியாமல் தான் ஆதங்கத்தில் பேசிவிட்டதாக மீண்டும் மற்றொரு வீடியோ பதிவையும் அவர் வெளியிட்டு உள்ளார். அதில் என்னுடைய ஆதங்கத்தில்தான் நான் அப்படி பதிவிட்டேன். ஆனால் நீங்கள் விடுப்பு அளித்தது எனக்கு தெரியவில்லை. காவலர்களுக்கு வாரவிடுப்பு அளித்த அதிகாரிகளுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.