undefined

கோர்ட் வாசல் முன் பதுங்கி இருந்த ரவுடி கும்பலை சுற்றி வளைத்த போலீசார்.. விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மை!

 

சென்னையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டவரை கொல்ல காத்திருந்த 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். சென்னை பிராட்வே ராஜா அண்ணாமலை மன்றம் பின்புறம் உள்ள டீக்கடை அருகே ஆயுதங்களுடன் கும்பல் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து வந்து 6 பேரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 4 கத்திகள், 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பிடிபட்டவர்கள் ஓட்டேரி மங்களாபுரத்தைச் சேர்ந்த யஸ்வந்த் ராயன், பெரம்பூரைச் சேர்ந்த காலேப் பிரான்சிஸ், அயனாவரத்தைச் சேர்ந்த கோகுல்நாத், கார்த்திக், கார்த்திகேயன், ஜெய்பிரதாப் என தெரியவந்தது.

விசாரணையில், அயனாவரத்தைச் சேர்ந்த சரண் என்பவருக்கும், யஸ்வந்த் ராயனுக்கும் முன் விரோதம் இருந்ததும், கோர்ட்டில் ஆஜராகி வெளியே வந்தபோது, சரணை கொல்ல, யஸ்வந்த் ராயனும் தன் கூட்டாளிகளுடன் காத்திருந்ததும் தெரியவந்தது. கைது செய்த 6 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!