சொத்து விற்றதில் கிடைத்த பணத்தை பங்கிடுவதில் தகராறு.. தம்பியை கம்பியால் அடித்துக் கொன்ற அண்ணன் கைது..!

 

மாதவரத்தில் சொத்து விற்ற பணத்தை பங்கீடு செய்ததில் ஏற்பட்ட தகராறில் தம்பியை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற அண்ணனை போலீசார் கைது செய்தனர். சென்னை மாதவரம் அம்பேத்கர் நகர் 2வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மனைவி ரோஜா. இவர்களுக்கு நரேஷ்குமார் (33), விக்னேஷ்குமார் (30) என்ற 2 மகன்கள் உள்ளனர். இருவரும் ஆட்டோ டிரைவர்கள். திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாஸ்கர் இறந்து விட்டார். இதனால் ரோஜா மாதவரம் பாண்டியன் தெருவில் உள்ள அண்ணன் வீட்டில் தங்கினார். அங்கிருந்து மாதவரம் போஸ்ட் பாக்ஸ் ரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், நரேஷ்குமாரும், விக்னேஷ்குமாரும் அம்பேத்கர் நகரில் உள்ள குடும்பச் சொத்தை அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு விற்க முடிவு செய்து அதற்கான முன்பணத்தையும் பெற்றனர்.

மீதித் தொகையை இன்றே வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டது. இதற்கிடையில் பணத்தை விநியோகிப்பது தொடர்பாக அண்ணனுக்கும், தம்பிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. நேற்று மாலை, அம்பேத்கர் நகரில் இருந்து ஆட்டோவுடன் விக்னேஷ்குமார் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு ஆட்டோவில் வந்த நரேஷ்குமார், 'சொத்தில் அதிக பணம் வேண்டும்' எனக் கேட்டு தகராறில் ஈடுபட்டார்.

அதற்கு விக்னேஷ்குமார், 'சமமாகப் பிரிக்க வேண்டும், அதிகமாக எடுக்க முடியாது' என்றார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த நரேஷ்குமார், ஆட்டோவில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து விக்னேஷ்குமாரின் தலையில் அடித்தார். இதில் அவர் மிகுந்த வலியால் அலறி துடித்தார். சிறிது நேரத்தில் மயங்கி கீழே விழுந்தார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து விக்னேஷ்குமாரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி விக்னேஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மாதவரம் இன்ஸ்பெக்டர் மீனாட்சிசுந்தரம் வழக்குப்பதிவு செய்து நரேஷ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். கொலை செய்யப்பட்ட விக்னேஷ்குமாருக்கு வாசுகி என்ற மனைவியும், புவிஷா என்ற 5 வயது மகளும் உள்ளனர்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க