திருமண விழாவில் பங்கேற்க வந்தவரை கைது செய்த போலீசார்...உறவினர்கள் சாலைமறியல்!
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஜாமீன் நிபந்தனையை மீறியதால் திருமண விழாவில் பங்கேற்க வந்தவரை போலீசார் கைது செய்தனர். இதற்கு உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே மணக்கரையைச் சேர்ந்தவர் பேச்சிமுத்து என்ற பாயாசம் (49). இவர் மீது முறப்பநாடு காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன. எனவே அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் சென்னை ஐகோர்ட்டில் தினமும் கையெழுத்திட்டு வந்தார்.
கடந்த சில நாட்களாக பேச்சிமுத்து ஐகோர்ட்டில் கையெழுத்திடாததால், அவருக்கு நீதிபதி பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார். எனவே பேச்சிமுத்துவை போலீசார் தேடி வந்தனர். நேற்று ஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளத்தில் நடந்த உறவினரின் திருமண விழாவில் பங்கேற்பதற்காக பேச்சிமுத்து வந்தார். அப்போது ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் பேச்சிமுத்துவை கைது செய்ய சென்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உறவினர்கள் நெல்லை-திருச்செந்தூர் மெயின் ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து உறவினர்கள் கலைந்து சென்றனர். இதையடுத்து பேச்சிமுத்துவை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!