undefined

இரவில் செல்லும் பெண்களிடம் நகை பறிப்பு.. தொடர் திருட்டில் ஈடுபட்ட காவல் அதிகாரி கைது..! 

 

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மாகினாம்பட்டி சாய்பாபா காலனியை சேர்ந்தவர் மகேஸ்வரி (வயது 58). இவர் கடந்த 27ம் தேதி இருசக்கர வாகனத்தில் ஜோதிநகர் அருகே வந்துள்ளார். அப்போது, ​​அந்த வழியாக புதிய கருப்பு நிற இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் கழுத்தில் கிடந்த 4 சவரன் நகையைப் பறித்துச் சென்றார்.

இதேபோல் பொள்ளாச்சி அருகே கோலார்பட்டி சுங்கச்சாவடியை சேர்ந்த அம்சவேணி  (32) என்பவர் இருசக்கர வாகனத்தில் உடுமலை ரோடு பிஏபி அலுவலகம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, ​​அந்த வழியாக கருப்பு நிற இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் கழுத்தில் கிடந்த 2 சவரன் நகையை பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டார். இருவரும் கொடுத்த புகாரின் பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில், இரு பெண்களிடம் கொள்ளையடித்ததும், ஒரே நபர் தான் என்பது தெரியவந்தது. இதையடுத்து பொள்ளாச்சி நகரின் உடுமலை ரோடு பகுதியில் பொருத்தப்பட்டிருந்த 150 சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். நகை பறிப்பு சம்பவத்தில் மாக்கினாம்பட்டி பகுதியில் வசிக்கும் தலைமைக் காவலர் சபரிகிரி (41) என்பது தெரியவந்தது.

இவர் கடந்த சில ஆண்டுகளாக பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் சிறப்பு காவலராக பணியாற்றி வந்தார். பின்னர் அவர் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். பின்னர், செட்டிபாளையம் காவல்நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்த அவர், சிறப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டபோது, ​​நகை பறிப்புச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.இதையடுத்து சபரி மீது கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து சபரிகிரியை கைது செய்து அவரிடமிருந்து 7.5 சவரன் நகைகளை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க