undefined

கதறியழும் மக்கள்... தீபாவளி சீட்டுக் கம்பெனி நடத்தி பல கோடி மோசடி... 2வது முறையும் ஏமாந்த மக்கள்!

 

கடந்த வருட தீபாவளி சீட்டு போட்டு, நகைகளை சொன்னது போல் தரவில்லை என்று போராட்டம் செய்து வந்த மக்கள், இந்த வருடமும் தீபாவளி சீட்டு போட்டு ஏமாந்துள்ளது திருவள்ளூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 50,000 பேரிடம் பணம் வசூலித்து சீட்டு கம்பெனி நடத்தியவர்கள் ஏமாற்றியுள்ளதாக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே தீபாவளி சீட்டு கம்பெனி நடத்தி, பல கோடி ரூபாய் பணத்தை வசூலித்து விட்டு மோசடி செய்த  நகை, பரிசு பொருட்களை கொடுக்காமல் மூடப்பட்ட சீட்டு கம்பெனியை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த காந்திநகரில் சாட்சி ஸ்டார் ஏஜென்சி என்ற பெயரில் தீபாவளி, அட்சய திருதியை, பொங்கல் பண்டிகைகளை முன்னிட்டு சீட்டு கம்பெனி நடத்தி வந்துள்ளனர்.

இந்த நிறுவனத்திற்கு சீட்டு பிடித்து கொடுத்தால் கமிஷன் என்ற அடிப்படையில் ஏஜென்டுகள் மூலமாகவும் பொதுமக்களிடம் பணம் வசூலிக்கப்பட்டு வந்துள்ளது.

மாதம் 500 ரூபாய் துவங்கி , 1000, 2000 ரூபாய்கள் என ரூ.10,000 வரையில் தவணைத் தொகைகள் 12 மாத சீட்டு பணமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இபப்டி சுமார் 50,000 பேர்களுக்கும் அதிகமாக வாடிக்கையாளர்களாக சேர்ந்த நிலையில், அவர்களிடம் கோடிக்கணக்கில் பணம் வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சீட்டுத் தொகைக்கு வருட தவணை முடிவில் நகைகள், மளிகை பொருட்கள், பட்டாசுகள், பரிசு பொருட்கள் வழங்குவதாக கூறி பணம் வசூலிக்கப்பட்ட நிலையில், கடந்தாண்டு தீபாவளி சீட்டு கட்டியவர்களுக்கே நகை, பொருட்களை கொடுக்கவில்லை என்றும் நிறுவனம் மூடப்பட்டு உரிமையாளர் தலைமறைவாக உள்ளதால் தங்களுடைய பணத்தை பெற்று தருமாறு பல முறை பாதிக்கப்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் இன்று பணம் வசூலித்த நிறுவன வாயிலில் வரும் டிசம்பர் 15ம் தேதி முதல் அடுத்தாண்டு பிப்ரவரி 15ம் தேதி வரையில் என வாடிக்கையாளர்கள் வரிசை எண் அடிப்படையில் பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் என பேனர் வைக்கப்பட்டிருந்தது. இதனையறிந்த பணம் செலுத்திய ஏஜென்டுகள் மற்றும் பாதிக்கப்பட்டோர் சீட்டு கம்பெனியை முற்றுகையிட்டு மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!