அடுத்த டார்கெட் நெல்லை தான்... முதல்வர் ஸ்டாலின் லேட்டஸ்ட் அப்டேட்!
தமிழக முதல்வர் ஸ்டாலின் மதுரை மற்றும் நெல்லை மாவட்டங்களில் நடைபெற்று வரும் அருங்காட்சியக பணிகள் குறித்து தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். தமிழக தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொல்லியல் துறை பணிகள் குறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை குறித்து 1972 ல் திருமலை நாயக்கர் அரண்மனை தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்டச் சின்னமாக அறிவிக்கப்பட்டு நல்ல முறையில் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.
ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் பண்டைய மரபுச் சின்னங்கள் அவற்றின் தொன்மை மாறாமல் பேணிப் பாதுகாக்கப்படும் எனக் கூறியிருந்தார். அதன்படி திருமலை நாயக்கர் அரண்மனை, தஞ்சாவூர் மராட்டா அரண்மனை, தரங்கம்பாடி டேனீஷ்கோட்டை ஆகிய வரலாற்றுச் சின்னங்களில் பாதுகாப்பு, மறுசீரமைப்பு பணிகள் 16.92 கோடி மதிப்பில் நடைபெற்று வருகின்றன.
அதில், திருமலை நாயக்க அரண்மனை நாடகசாலை, பள்ளியறை பகுதிகளில் புனரமைப்பு, பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் மூன்று கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது. திருமலை நாயக்கர் அரண்மனையில் மேற்குப்புறத்தில் கம்பிவேலி மற்றும் புல்வெளித்தளம் ரூ 61 இலட்சத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அரண்மனையின் தொன்மையை பாதுகாக்கும் வண்ணம் அனைத்துத் தளப்பகுதிகளிலும் ஒரே மாதிரியான கற்கள் ரூ 3.73 கோடி மதிப்பில் பதிக்கப்பட்டு வருகின்றன என திருமலை நாயக்கர் அரண்மனையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு குறிப்பிட்டார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டரில் தூங்காநகருக்கு மேலும் எழில் சேர்க்கும் வகையில் திருமலை நாயக்கர் அரண்மனை ஒளிர்கிறது.
சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் அதிகம் காணும் பகுதிகளாகக் கீழடியும், இந்த அரண்மனையும் திகழட்டும்! இவற்றைப் போலவே, நெல்லையில் ‘பொருநை அருங்காட்சியகம்’ திறப்பதற்கான பணிகள் தொல்லியல் துறை சார்பில் விரைந்து முடிக்கப்படும் என எதிர்பார்க்கிறேன் என ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!