undefined

சென்னையில் அடுத்த அதிர்ச்சி... லிவிங் டு கெதராக வாழ்ந்து வந்த இளம் பெண் தற்கொலை!

 

சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சூட்கேஸில் இளம்பெண் துண்டுதுண்டாக வெட்டிக் கொலைச் செய்யப்பட்ட அடைக்கப்பட்ட நிலையில், அடுத்த அதிர்ச்சியாக தாம்பரத்தில் லிவிங் டு கெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்த இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

அழுகிய நிலையில் இளம் பெண்ணின் சடலத்தை மீட்ட போலீசார் உடன் லிவிங் டூ கெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்த இளம்பெண்ணின் ஆண் நண்பரைத் தேடி வருகின்றனர்.

பெங்களூருவை சேர்ந்தவர் குளோரியா (24). இவர் மேற்கு தாம்பரத்தில் உள்ள பிரபல துணி கடையில் வேலைப் பார்த்து வந்தார். அதே துணி கடையில் வேலை பார்த்து வரும் செஞ்சியை சேர்ந்த ஒருவருடன் குளோரியா பழகி வந்த நிலையில், இருவரும் தாம்பரம், ரங்கநாதபுரம், 5வது தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து லிவிங் டு கெதராக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. 

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தனது ஆண் நண்பருடன் சென்று விட்டு வீடு திரும்பி குளோரியா அதன் பின்னர் வீட்டிலிருந்து வெளியே வரவில்லை.

இந்நிலையில் குளோரியா தங்கியிருந்த வீட்டில் இருந்து துர்நற்றம் வருவதாக அக்கம்பக்கத்தினர் தாம்பரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், குளோரியாவின் வீட்டுக் கதவைத் தட்டியும் திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது குளோரியா உடல் அழுகிய நிலையில் நைலான் கயிற்றால் தூக்கில் பிணமாக தொங்கியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். 

இதனையடுத்து குளோரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு வீட்டில் சோதனை செய்த போது தற்கொலைக்கு முன்பாக குளோரியா எழுதிய கடிதத்தை கைப்பற்றினர். 

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குளோரியாவின் ஆண் நண்பரை தேடி வருகின்றனர்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!