undefined

 அமெரிக்காவில் அடுத்த அதிர்ச்சி... கமலா ஹாரிஸ் தேர்தல் பிரச்சார அலுவலகத்தில் துப்பாக்கிச் சூடு!

 
அமெரிக்கத் தேர்தலில் அடுத்த அதிர்ச்சியாக அரிசோனாவின் டெம்பே நகரில் உள்ள கமலா ஹாரிஸின் தேர்தல் பிரச்சார அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் இது இரண்டாவது முறையாக குறிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அரிசோனா மாகாணத்தில் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸின் தேர்தல் பிரச்சார அலுவலகம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அலுவலகத்தின் முன்பக்க ஜன்னல்கள் துப்பாக்கியால் சுடப்பட்ட பின்னர் டெம்பே நகரில் உள்ள அலுவலகம் குறிவைக்கப்படுவது ஒரு மாதத்தில் இது இரண்டாவது முறையாகும்.

ஜனநாயக தேசியக் குழு அலுவலகத்தில் துப்பாக்கிச் சூடு நிகழ்ந்துள்ளதை உறுதிப்படுத்திய போலீசார், இதில் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை என்றார்.

இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது அலுவலக வளாகத்திற்குள் யாரும் இல்லை என்றும், ஆனால் இது அந்த கட்டிடத்தில் பணிபுரிபவர்கள் மற்றும் அருகிலுள்ளவர்களின் பாதுகாப்பு குறித்த கவலையை எழுப்புகிறது என்றும் கட்சியினர் தெரிவித்தனர். 

அலுவலகத்தின் ஒரு கதவில் இரண்டு குண்டு துளைகளையும், அலுவலகத்தின் ஜன்னல்களில் மேலும் இரண்டு துளைகளையும் காட்டும் காட்சிகளை உள்ளூர் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பி வருகின்றன. இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.

துப்பறியும் நபர்கள் குற்றம் நடந்த இடத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட ஆதாரங்களை பகுப்பாய்வு செய்து வருகின்றனர். பிரச்சார அலுவலக ஊழியர்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள மற்றவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தும் வகையில், அரிசோனா ஜனநாயகக் கட்சியின் தலைவி யோலண்டா பெஜரானோ ஒரு அறிக்கையில், "அரிசோனா ஜனநாயகக் கட்சி வன்முறையின் இலக்காக மாறியது மிகவும் வருத்தமளிக்கிறது என்றார்.

அரிசோனாவிற்கு ஹாரிஸ் திட்டமிடப்பட்ட பயணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!