undefined

இரண்டாவதும் பெண் குழந்தை பிறந்ததால் ஆத்திரம்.. கொடூர கணவரின் செயலால் பதறிப்போன தாய்..!

 

ரோஹித் யாதவ் மற்றும் அவரது மனைவி அனிதா மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹிராவில் வசித்து வருகின்றனர். ரோஹித் தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஒன்றரை வயதில் பெண் குழந்தை இருந்தது, இரண்டாவதாகவும் பெண் குழந்தை பிறந்தது. இதனால் அதிருப்தி அடைந்த ரோஹித், இரண்டாவது பெண் குழந்தையை வெறுத்துள்ளார்.

சம்பவத்தன்று, அனிதா வேலைக்கு சென்றிருந்தபோது வீட்டில் தனியாக இருந்த ரோஹித், பிறந்து 18 நாட்களே ஆன தனது பெண் குழந்தையை பெரிய பையில் போட்டுக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். பின்னர் வீட்டில் இருந்து சற்று தொலைவில் உள்ள சன்வார் சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் விமான நிலையம் அருகே உள்ள புதரில் குழந்தையை வீசி சென்றுள்ளார்.

சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்து குழந்தையை காணவில்லை என்று அனிதாவிடம் கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த அனிதா உடனடியாக போலீசில் புகார் அளித்தார். போலீசார் விரைந்து வந்து அங்குள்ள சிசிடிவி கேமராவை ஆராய்ச்சி செய்து பார்த்தபோது ரோஹித் பையுடன் வீட்டை விட்டு வெளியேறியதைக் கண்டனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தினர்.

ஆனால், மளிகை சாமான்கள் வாங்க சென்றதாக ரோஹித் போலீசாரிடம் கூறியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் எங்களுக்கு முதலும் பெண்குழந்தை, இரண்டாவதும் பெண்குழந்தை. அதனால் இப்படி செய்தேன் என்று தான் செய்த குற்றத்தை அவர் ஒப்புக் கொண்டிருக்கிறார். சற்றும் தாமதிக்காமல் உடனடியாக ரோஹித் கூறிய இடத்திற்கு சென்ற போலீசார், சம்பவ இடத்தில் உடல் நலத்துடன் இருந்த குழந்தையை மீட்டு அனிதாவிடம் ஒப்படைத்தனர்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க