undefined

உஷார்... உணவகங்களின் பெயர் பலகையில் உரிமையாளரின் பெயர் குறிப்பிட உத்தரவு... மாநில அரசு அதிரடி!

 

உணவகங்களின் பெயர் பலகையில் கட்டாயம் உரிமையாளரின் பெயர் இடம் பெற்றிருக்க வேண்டும் என்று மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அப்படி குறிப்பிடப்படாத உணவகங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள காங்கிரஸ் அரசு, உணவக உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களின் பெயர்கள் மற்றும் முகவரிகள் பலகைகளில் குறிப்பிட வேண்டும் என்று கூறியுள்ளது. ஜனவரி முதல் இந்த விதி அமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது. இன்று நடைபெற்ற மாநில நகர்ப்புற வளர்ச்சி மற்றும் மாநகராட்சி கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.


இந்த உத்தரவை அமல்படுத்துவதை கண்காணிக்க இமாச்சல பிரதேச சட்டசபை சபாநாயகர் குல்தீப் சிங் பதானியா, அமைச்சர்கள் விக்ரமாதித்ய சிங், அனிருத் சிங் ஆகியோர் அடங்கிய ஏழு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. வணிகர்களுக்கு அடையாள அட்டை வழங்குவது உள்ளிட்ட விதிமுறைகள் விரைவில் கொண்டு வரப்படும் என அமைச்சர் விக்ரமாதித்ய சிங் தெரிவித்தார். முன்னதாக, உத்தரபிரதேசத்திலும் இதே உத்தரவை யோகி அரசு பிறப்பித்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!