undefined

அதிர்ச்சி.. தேசிய கைப்பந்து வீரர் மர்மமான முறையில் உயிரிழப்பு.. தீவிர விசாரணையில் போலீசார்..!

 

தேசிய கைப்பந்து வீரர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. காரைக்கால் நேரு நகரை சேர்ந்த பிலோமின் ராஜ், புதுச்சேரி தேசிய அளவிலான கூடைப்பந்து வீரராக இருந்து, பைபர் கேபிள் பதிக்கும் பணியும் செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி கனிமொழி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.


வழக்கம் போல் வேலைக்கு சென்ற பிலோ மின்ராஜ் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.இந்நிலையில் கல்லி குப்பம் கடற்கரையில் பிலோமின் ராஜ் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கொலையா என விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர்  தகவல் அறிந்ததும் காரைக்கால் அரசு மருத்துவமனை முன்பு திரண்ட உறவினர்கள் பிலோமின் ராஜ் உடலை பார்த்து வேதனை அடைந்தனர். சமீபத்தில் நடந்த வாலிபால் போட்டியில் வெற்றி பெற்றவர் என்பதும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கையில் முதல் பரிசை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க