undefined

 மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கு... தேவநாதன் அலுவலகத்தில் 3 கிலோ தங்கம் பறிமுதல்!

 

சென்னை மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பாஜக கூட்டணி வேட்பாளர் தேவநாதனின் அலுவலகத்தில் இருந்து 3 கிலோ தங்கம் இன்று போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

‘தி மயிலாப்பூர் இந்து பெர்மனென்ட் ஃபண்ட்’ என்ற பெயரில் சென்னை மயிலாப்பூரில் நிதி நிறுவனம் ஒன்று கடந்த 150 வருடங்களாக இயங்கி வருவதாக கூறப்படும் நிலையில், இந்நிறுவனத்தை நடத்தி, 144 முதலீட்டாளர்களிடம் ரூ. 24.50 கோடி மோசடி செய்ததாக அந்நிறுவன இயக்குநர் தேவநாதன் யாதவ் மற்றும் குணசீலன், மகிமைநாதன் ஆகியோரை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், இவர்கள் 3 பேரையும் 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், நிதி நிறுவனத்தின் உரிமையாளர் தேவநாதனுக்கு சொந்தமான அலுவலகத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இன்று திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் 3 கிலோ தங்கம் மற்றும் அளவுக்கதிகமான வெள்ளி பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

தேவநாதனை அவரது அலுவலகத்துக்கு அழைத்து சென்று, அவரது  லாக்கர் உள்ளிட்டவற்றை திறந்து சோதனை மேற்கொண்டதில், 3 கிலோ தங்கம், 35 கிலோ வெள்ளி பொருட்கள், நிலம் தொடர்பான 15 ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை