undefined

 ஆண் குழந்தை பெற துப்பில்ல... கணவர் மாமியாரின் கொடுமை தாங்காமல் 2 பெண்குழந்தைகளின் தாய் தற்கொலை!  

 

 
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பகுதியில் வசித்து வருபவர்  கண்ணன். இவருடைய மனைவி சுதா. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள்.  கண்ணனும் அவரது தாயும்  சுதாவிடம் இரண்டுமே பெண் குழந்தைகள். ஆண் குழந்தை பெற துப்பில்லை எனக் கூறி அடிக்கடி தகராறு செய்து துன்புறுத்தி வந்துள்ளனர்.

இதனால் மன அழுத்தத்தால்  சுதா வீட்டில் தற்கொலை செய்து உயிரிழந்து கிடந்ததாக அவரது கணவர் சுதாவின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.இதனால் அதிர்ச்சி அடைந்த சுதாவின் உறவினர்கள், கண்ணனிடம் தகராறில் ஈடுபட்டனர். தகவலின் பேரில் விரைந்து வந்த  காவல்துறையினர்  சுதாவின் உடலை மீட்டு  பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்க்கிடையே சுதாவின் உறவினர்கள், சுதாவின் கணவர், மாமியார் மற்றும் மாமனார் ஆகியோர் சுதாவை துன்புறுத்தி கொலை செய்துவிட்டு தற்கொலை செய்ததாக நாடகமாடுகின்றனர் என சாலை மறியலில் ஈடுபட்டனர்.


இது குறித்து சுதாவின் மூத்த சகோதரி  , “சுதாவிடம் சொத்து கேட்டு கொடுமைப்படுத்தி உள்ளனர். தாய் வீட்டிற்கு அனுப்பாமல் யாருடனும் எந்த தொடர்பிலும் இல்லாமலும் சுதா இருந்துவந்தார்.  அவருக்கு இரண்டும் மகள்களாக இருப்பதால் சுதாவை கொடுமைப்படுத்தியும் வந்துள்ளனர்” எனக் கூறினார்.  காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சுதாவின் கணவர் மற்றும் மாமனாரை விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!