ருசிகரம்... மகனுடன்  10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வந்த தாய்!

 

 தமிழகத்தில் இன்று 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குகிறது. அண்டை மாநிலமான கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நேற்று தொடங்கி முதல் நாளில்  மொழி பாடத் தேர்வுகள் நடந்தன. மாநிலம் முழுவதும் 8.69 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு  எழுதினர்.  கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டத்தில் தாயும், மகனும் ஒரே  மையத்தில் தாயும் மகனும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினர். இச்சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.  


யாதகிரி மாவட்டம் ஷாகாபுரா தாலுகாவில் சாகாரா கிராமத்தில் வசித்து வருபவர் 32 வயது கங்கம்மா.இவருக்கு திருமணமாகி 15 வயதில் மல்லிகார்ஜுனா என்ற மகன் உள்ளான். கங்கம்மா 9ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். இதனால் அவருக்கு நீண்ட காலமாக 10ம் வகுப்பு படித்து விட வேண்டும் என  தீராத வேட்கையில் இருந்தார்.
அவரது மகன் மல்லிகார்ஜுனா நடப்பு கல்வி ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தார். இதனால் மகன்  துணையுடன்  எஸ்.எஸ்.எல்.சி. படிக்க கங்கம்மா முடிவு செய்தார். நேற்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கர்நாடகா முழுவதும் தொடங்கியது.

தேர்வு எழுதவும் கங்கம்மாவுக்கும், அவரது மகன் மல்லிகார்ஜுனாவுக்கும் அதே பகுதியில் உள்ள அரசு பளளியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு இருந்தது. இதனால் தாயும், மகனும் நேற்று தேர்வு எழுத ஒன்றாக வந்திருந்தனர்.  தனித்தனி வகுப்பறைகளில் அமர்ந்து கங்கம்மாவவும், அவரது மகனும் தேர்வு எழுதினர். தாயும், மகனும் ஒரே நேரத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதியது மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்