undefined

தொடரும் அவலம்... இளம்பெண்ணை ஆபாசமாக படம் பிடித்து மிரட்டல்... பெண் உட்பட 3 பேர் கைது!

 

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே இளம்பெண் ஒருவர் தனது வீட்டில் உடை மாற்றும் போது ஆபாசமாக செல்போனில் படம் பிடித்து மிரட்டிய வழக்கில் ஆனந்தராஜ், சின்னச்சாமி, தனலட்சுமி என 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே எ.வாடிப்பட்டியை சேர்ந்தவர் பால்சாமி.  கூலித்தொழிலாளியான இவரது மனைவி ராஜலட்சுமி. இவர்களின் பக்கத்து வீட்டில் வசித்து வந்தவர் தனலட்சுமி(30). 

இந்நிலையில், அதே பகுதியில் வசித்து வரும் ஆனந்தராஜ் என்பவரின் தூண்டுதலின் பேரில் வீட்டில் ராஜலட்சுமி தனியாக உடைமாற்றிக் கொண்டிருந்த போது தனலட்சுமி, அவரை ஆபாசமாக புகைப்படம் எடுத்து வந்துள்ளார்.

பின்னர் செல்போனில் எடுத்த இந்த புகைப்படங்களை ஆனந்தராஜுக்கு அனுப்பியுள்ளார். செல்போனில் ஆபாச புகைப்படங்களைப் பார்த்த ஆனந்த்ராஜின்  தம்பி சின்னச்சாமி (28), ஆபாச புகைப்படங்களை ராஜலட்சுமியிடம் காட்டி, தன்னுடன் உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று மிரட்டியுள்ளார். 

உடனடியாக ராஜலட்சுமி துணிச்சலாக இது குறித்து பெரியகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதில், தன்னை ஆபாசமாக படம் எடுக்க தூண்டிய ஆனந்தராஜ், தனக்குத் தெரியாமல் தன்னை ஆபாசமாக செல்போனில் படம் எடுத்த தனலட்சுமி, படத்தை காட்டி மிரட்டிய சின்னச்சாமி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்திருந்தார். 

இதையடுத்து பெரியகுளம் அனைத்து மகளிர் மூன்று பேரையும் கைது செய்தனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை