undefined

 மகளிர் விடுதி ஜன்னலில் எட்டிப்பார்த்த ஆண்... கத்தி கூச்சலிட்ட மாணவிகள் !  

 
 தமிழகத்தில்  திருப்பத்தூரில் ஆதிதிராவிடர் அரசு பெண்கள் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில், விடுதி அருகே கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வரும் பெட்ரிக் என்ற இளைஞர், விடுதியின் ஜன்னல் வழியாக மாணவிகள் அறையை எட்டிப்பார்த்ததாக கூறப்படுகிறது.

 
ஜன்னலில் திடீரென ஆண் உருவம் தெரிந்ததும், மாணவிகள் அலறி கூச்சலிட்டுள்ளனர். பிறகு இதுகுறித்து உடனடியாக ஹாஸ்டல் வார்டனிடம் தகவல் தெரிவித்துள்ளனர். உடனே ஹாஸ்டல் வார்டனும் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் பெட்ரிக்கை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த லேடீஸ் ஹாஸ்டலுக்கு பக்கத்திலேயே, கம்ப்யூட்டர் சென்டர் வைத்திருக்கிறாராம் பெட்ரிக். புதுப்பேட்டை ரோடு பகுதியை சேர்ந்த பெட்ரிக் (38), கடந்த 10 தினங்களுக்கு முன்பு ஹாஸ்டலில், மாணவிகள் ரூம் ஜன்னலை எட்டிப் பார்த்துள்ளார். மாணவிகள் அப்போதே கத்திக்கூச்சல் போடவும், பெட்ரிக் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அதற்கு பிறகுதான், ஹாஸ்டல் வார்டனிடம் பெட்ரிக்கின் அடையாளத்தை மாணவிகள் கூறியுள்ளனர்.


 
நாளுக்கு நாள் பெண்கள் ஹாஸ்டலில் இப்படியான சம்பவங்கள் நடப்பது மாணவிகளையும், பெற்றோரையும், கவலைக்குள்ளாக்கி வருகிறது. எனவே, விடுதிகளில் கூடுதல் கண்காணிப்பை வலுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளும் தலைதூக்கி வருகின்றன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை