undefined

பகீர் வீடியோ... வீட்டிற்குள் புகுந்து கண்ணெதிரே மிதித்துக் கொன்ற மக்னா யானை!

 

கேரள மாநிலம், வயநாட்டில் மக்னா யானை, வீட்டின் சுவற்றை இடித்து தள்ளியபடி, வீட்டின் கதவை உடைத்து உள்ளே உயிருக்கு பயந்தபடி பதுங்கிய ஒருவரை மிதித்து கொன்றது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள், புலிகள், சிறுத்தைகள் உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளின் அருகே சுற்றி திரிந்ததால், மக்னா யானை ஒன்று மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. இதையடுத்து யானைக்கு ரேடியோ காலர் பொருத்திய வனத்துறை அதிகாரிகள், அதனை மீண்டும் பந்திப்பூர் வனப்பகுதியில் விடுவித்தனர். தொடர்ந்து அதன் நடமாட்டத்தைக் கண்காணித்து வருகின்றனர்.

ஆனால், வீட்டின் கேட்டை உடைத்துக் கொண்டு வீட்டிற்குள் புகுந்த யானை, அஜியை கடுமையாக தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த அஜி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே இதே மக்னா யானை, அதே பகுதியில் உள்ள வீடு ஒன்றையும் இடித்து சேதப்படுத்தியது. இதையடுத்து அந்த பகுதி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, வனத்துறையினர் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க