undefined

உலக இனிப்பு சாம்ராஜ்ய தலைவர் காலமானார்.. பிரபலங்கள் இரங்கல்..!!

 

புகழ்பெற்ற இனிப்பு தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனமான பிகானெர்வாலா நிறுவனர் லாலா கேதர்நாத் அகர்வால் திங்களன்று காலமானார், அவருக்கு வயது 86.1905 ல்   ராஜஸ்தான் மாநிலம் பிகானெர் நகர வீதிகளில் ரசகுல்லா மற்றும் ஓமப்பொடி இவைகளில்   தலையில் சுமந்து விற்றுவந்த இவரது குடும்பம் 1950 ல் டெல்லிக்கு குடிபெயர்ந்தது. டெல்லியில் தனது சகோதரருடன் சேர்ந்தது சாலையோரக் கடையை அமைத்த கேதர்நாத் அகர்வால் மற்றும் அவரது சகோதரரை பிகானெர்-வாலா என அவரது சொந்த ஊர் பெயரை வைத்தே அவரது வாடிக்கையாளர்கள் அழைத்தனர்.


இதனையே தனது கடைப்பெயராக மாற்றி சாந்தினி சவுக் பகுதியில் கடையில் வைத்து  கேதர்நாத் அகர்வால் பின்னாளில் அவரது கடையிருக்கும் தெருப்பெயரே பிகானெர்வாலா தெரு என அழைக்கப்படும் அளவுக்கு உயர்ந்தார்.  தனது இனிப்பு சாம்ராஜ்யத்தை டெல்லி மட்டுமன்றி உலகின் பல்வேறு நாடுகளுக்கும் விரிவுபடுத்திய கேதார்நாத், நியூசிலாந்து, சிங்கப்பூர், நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்  நாடுகளில் மட்டுமல்லாமல் வெகு சமீபமாக சென்னை மக்களையும் தனது ரசகுல்லாவால் கவர்ந்தார்.


இவரது மறைவு குறித்து அவரது மகனும் அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்  ஷியாம் சுந்தர் அகர்வால் செய்திக்குறிப்பு ஒன்றை விடுத்துள்ளார்.  “காகாஜியின் மறைவு பிகனெர்வாலாவுக்கு மட்டுமல்ல; இனிப்பு தயாரிப்பு தொழிலில் ஒரு வெற்றிடம் ஆகும்' எனத் தெரிவித்துள்ளார்.  

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!