பாலியல் குற்றவாளிக்கு பொது மன்னிப்பு... தவறை உணர்ந்து ஹங்கேரி அதிபர் பதவியை ராஜினாமா செய்தார்!

 

ஹங்கேரியின் பழமைவாதக் கட்சியின் தலைவர் சனிக்கிழமையன்று பதவி விலகினார். குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்தவருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியதைத் தொடர்ந்து எதிர்ப்புகள் வெடித்தது, மேலும் பொதுமக்களின் கோவத்தை தூண்டியது. 2022 ஆம் ஆண்டு முதல் அதிபராக பதவி வகிக்கும் 46 வயதான கேட்லின் நோவக், தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

அரசால் நடத்தப்படும் சிறுவர் இல்லத்தில் பாலியல் துஷ்பிரயோகத்தை மறைக்க உதவிய ஒருவருக்கு ஏப்ரல் 2023 இல் ஜனாதிபதி தரப்பில் மன்னிப்பு வழங்கப்பட்டது. இது கடந்த வாரத்தில் பொதுமக்களின் மத்தியில் அதிர்வலையை கிளப்பியுள்ளது. 2004 மற்றும் 2016 க்கு இடையில் குறைந்தது 10 குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சிறுவர் இல்லத்தின் இயக்குனருக்கு எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

தனது கூட்டாளிகளின் புகார்களை வாபஸ் பெறுமாறு அழுத்தம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியது சமீபத்தில் மக்களுக்குத் தெரிந்தது. குற்றம் சாட்டப்பட்டவரை நான் கருணையுடன் மன்னித்தேன், மேலும் அவரை நம்பிய குழந்தைகளை அவர் துன்புறுத்தவில்லை என்று நான் நம்பினேன். நான் தவறு செய்துவிட்டேன். நான் யாரையாவது புண்படுத்தியிருந்தால், பாதிக்கப்பட்டவர்கள் நான் உங்கள் பக்கம் இல்லை என்று உணர்ந்திருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்," என  கேட்லின் நோவக் தெரிவித்தார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!