undefined

 நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு.. வழக்கறிஞருக்கு தலையில் அரிவாளால் வெட்டு!

 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  ஓசூர் ஏரித்தெரு பகுதியில் வசித்து வருபவர் 28 வயது  கண்ணன். இவர்  ஓசூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்தார்.  இவரை  நீதிமன்ற வளாகத்திலேயே ஆனந்தன் என்ற சக வழக்கறிஞர் பின் தொடர்ந்து அரிவாளால் பலமாக பல்வேறு இடங்களில் வெட்டி உள்ளார். இதனால் படுகாயமடைந்த கண்ணன், சாலையிலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

அவரை உடனடியாக அக்கம்பக்கத்தினர் மற்றும் சக வழக்கறிஞர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு  அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  


நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என மற்ற வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்தின் முன்பாக கண்டன குரல் எழுப்பியுள்ளனர். இதனிடையே வழக்கறிஞரை வெட்டிய ஆனந்த் மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!