10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் எடுத்த கூலித் தொழிலாளி மகள்!

 

 ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா பேரையூர் அருகே கிராமத்தில் வசித்து வருபவர்  தர்மராஜ் – வசந்தி தம்பதியினர். தர்மராஜ் திருப்பூரில் வெல்டிங் பட்டறை  வெல்டராக பணிபுரிந்து வருகிறார். வசந்தி பேரையூரில் கடை ஒன்றில் வியாபாரியாக கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் காவிய ஜனனி கமுதி உள்ள தனியார் பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் மொழிப்பாடமான தமிழில் 99 ம், மற்ற பாடங்களில் தலா 100 மதிப்பெண்கள் பெற்று, 500க்கு 499 எடுத்து மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.


இம்மாவட்டத்தில்  வசித்து பலரும் பல்வேறு மாவட்டங்களில் படித்து வரும் சூழ்நிலையில் மிகவும் பின் தங்கிய மாவட்டத்தில் அதிலும் குறிப்பாக மிகவும் பின் தங்கிய பகுதியான கமுதி பகுதியில் படித்து 499 மதிப்பெண்கள் எடுத்த மாணவியை பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்துக் வருகின்றனர் . இது குறித்து மாணவியின் தாய் வசந்தி  நானும் என் கணவரும் கூலித்தொழில் செய்து வருகிறோம் . இந்நிலையில் குழந்தைகளை நல்ல முறையில் படிக்க வைத்து வருகிறோம். காவியா ஜனனிக்க கலெக்டர் ஆவது லட்சியம் என் பார், அதன் படி 499 மதிப்பெண் பெற்றது மகிழ்ச்சி, பிளஸ் டூவிலும் அதிக மதிப்பெண் எடுத்து மாவட்டத்திற்கும் கிராமத்திற்கும் பெருமை சேர்ப்பார் என நம்புகிறோம்.  


மாணவி காவியா ஜனனி  “எனக்கு சிறு வயது முதல் பெற்றோர் மிகவும் ஊக்கத்துடன் படிக்க வைத்தனர். குடும்பத்தின் சூழ்நிலை கருதி கடுமையாக படித்து வந்தேன், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் தனிக்கவனம் செலுத்தி , அதிக மதிப்பெண் எடுப்பதற்கு பயிற்சி அளித்தனர். இந்நிலையில் மாநில அளவில் முதலிடம் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு கலெக்டர் ஆவது லட்சியம். அதற்கு ஏற்ற பாடப்பிரிவு 11ம் 12ம் வகுப்பில் மற்றும் கல்லூரி படிப்பில் தேர்ந்தெடுத்து படித்து நிச்சயம் கலெக்டர் ஆவேன் எனத் தெரிவித்துள்ளார்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!