undefined

அதிர்ச்சி.. குடி போதையில் மாடியில் இருந்து கீழே விழுந்த நபர் பரிதாப பலி...!

 

போதையில் தூங்கிய தொழிலாளி மாடியில் இருந்து தவறி விழுந்து 2 வீடுகளின் சுவரில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். புதுச்சேரி ஏனாம் பிராந்தியம் ஸ்டேட் பாங்க் சாலையை சேர்ந்தவர் சிவசுப்ரமணியம் (38). திருமணமாகாத இவர், பெற்றோர் இல்லாமல் சொந்த வீட்டில் தனியாக வசித்து வந்தார். கூலித்தொழிலாளியான இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதற்கிடையில் நேற்று இரவு சிவசுப்ரமணியம் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார்.

சாப்பிட்டுவிட்டு வழக்கம் போல் வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று சுற்றுச்சுவரில் ஏறி தூங்கினார். அப்போது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்த அவர், பக்கத்து வீட்டின் சுற்றுச்சுவருக்கும், சொந்த வீட்டின் சுற்றுச்சுவருக்கும் இடையே சிக்கிக் கொண்டார். அதன் பிறகு மீள முடியாத நிலையில் நீண்ட நேரம் உயிருக்கு போராடினார். இரவு நேரம் என்பதால் யாரும் உதவிக்கு வராததால்  உடல் சிக்கிய நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில், இன்று காலை சிவசுப்பிரமணியத்தின் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் மாடிக்கு வந்து பார்த்தபோது, ​​இரு வீடுகளின் இடிபாடுகளுக்கு இடையே அவர் சிக்கியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஒரு மணி நேரம் போராடி உடலை மீட்டனர். சிவசுப்ரமணியம் குடித்துவிட்டு கீழே விழுந்தாரா ? அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் இறந்தாரா என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க