செம... அனைத்து வகை டாக்சிக்கும் ஒரே மாதிரியான கட்டணம்.. அதிரடி சரவெடி...   !

 

வாடகை டாக்சிகள் மற்றும் ஓலா மற்றும் ஊபர் போன்ற ஆப் அடிப்படையிலான டாக்ஸி சேவைகளுக்கான கட்டணத்தை கர்நாடக அரசு நிர்ணயித்துள்ளது. கர்நாடகாவில் இந்த புதிய விதியின்படி, டாக்ஸி வாகனங்களின் விலையின் அடிப்படையில் மூன்று வகையாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ.10 லட்சம் அல்லது அதற்கும் குறைவான விலையுள்ள வாகனங்களுக்கு, முதல் 4 கி.மீட்டருக்கு நிலையான கட்டணம் ரூ.100. கூடுதல் கிலோமீட்டருக்கு ரூ.24 கூடுதல் கட்டணம் வசூலிக்க அனுமதிக்கப்படுகிறது.

ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரையிலான டாக்சிகள் முதல் 4 கிமீக்கு குறைந்தபட்சக் கட்டணமாக ரூ.115 ஆகவும், அடுத்த ஒவ்வொரு கிமீக்கு ரூ.28 கூடுதல் கட்டணமாகவும் வசூலிக்கப்படும். ரூ.15 லட்சம் அல்லது அதற்கு மேல் விலையுள்ள டாக்சிகளுக்கு முதல் 4 கி.மீ.க்கு ரூ.130 வீதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.32 வசூலிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

மேலும், புதிய விதிகள் நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரையிலான இரவுப் பயணத்திற்கு கூடுதலாக 10% கட்டணத்தை அனுமதிக்கின்றன. முதல் 5 நிமிட காத்திருப்பு நேரம் பயணிகளுக்கு இலவசம். அதன் பிறகு நிமிடத்திற்கு ரூ.1 கட்டணம் விதிக்கப்படும். டாக்ஸி ஆபரேட்டர்கள் பயணிகளிடமிருந்து 5% ஜிஎஸ்டி மற்றும் சுங்க கட்டணம் வசூலிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

புதிய கட்டண விதியானது ஆப் அடிப்படையிலான டாக்ஸி சேவைகளுக்கான உயர் கட்டணங்களை நீக்கியுள்ளது. முன்னதாக, இந்த வகை டாக்சிகள் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்து சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக, 'பீக் ஹவர்ஸ்' கட்டணம் அதிகமாக இருப்பதாக புகார் எழுந்தது. அரசின் புதிய விதிகளை ஓலா மற்றும் உபேர் சங்கங்கள் வரவேற்றுள்ளன. ஆனால், அடிப்படைக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் பயணிகள் கவலையடைந்துள்ளனர்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க