படுகாயமடைந்தவரை ஜீப்பில் கட்டி வைத்து அராஜகம்... இஸ்ரேல் ராணுவம் வெறிச்செயல்! 

 

இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் நடத்திய திடீர் சோதனையில் காயமடைந்த பாலஸ்தீனர் ஒருவரை ஜீப்பில் கட்டி வைத்தனர். இதன் மூலம் தங்கள் பாதுகாப்புப் படையினர் நெறிமுறைகளை மீறியதாக இஸ்ரேலிய ராணுவம் அதிர்ச்சி தரும் தகவல்களை வெளியிட்டுள்ளது.  இது குறித்த  வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து இஸ்ரேல் பாதுகாப்புப் படை  இதனை உறுதி செய்துள்ளது. இந்த சோதனையில் துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் ஒருவர் காயமடைந்தார்.  அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்சை கேட்டதும்  ராணுவத்தினர்  அவரை ஜீப்பின் முன்பகுதியில் கட்டி அழைத்துச் சென்றதாக காயமடைந்த நபரின் குடும்பத்தினர் வருத்தம் தெரிவித்தனர்.

படுகாயம் அடைந்தவரை சிகிச்சைக்காக செம்பிறை  இயக்கத்திடம் ஒப்படைத்தனர்.  இது குறித்து விசாரணை நடத்தப்படும் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், அந்நபர் உள்ளூரை சேர்ந்த முஜாஹத் ஆஸ்மி என குறிப்பிட்டுள்ளனர்.  இது குறித்து  இஸ்ரேலிய ராணுவம்  "வாடி புர்கின் பகுதியில் தேடப்படும் சந்தேக நபர்களைக் கைது செய்ய நடத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஜூன் 22ம் தேதி  சனிக்கிழமை  இஸ்ரேலிய படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதற்கு பதிலடியாக இஸ்ரேலிய படையினரும் துப்பாக்கிச் சூடு நடத்தினர்," என தெரிவித்துள்ளது.

அக்டோபர் 7ம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடைபெற்றது. இதன் பிறகு காஸா பகுதியில் போர் தொடங்கப்பட்டது. இதிலிருந்து, மேற்குக் கரையில் வன்முறை அதிகரித்திருப்பதாகத் தெரிகிறது.  கிழக்கு ஜெருசலேம் உட்பட மேற்குக் கரையில் ஆயுதக் குழுக்களின் உறுப்பினர்கள், தாக்குதல் நடத்தியவர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பல்வேறு சம்பவங்களில் இதுவரை 480 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக ஐநா சபை  தெரிவித்துள்ளது.  ஜூன் 22ல் காஸா நகரில் உள்ள கட்டடங்கள் மீது இஸ்ரேல் நடத்திய இரண்டு தனித்தனி வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 38 பேர் கொல்லப்பட்டனர் என ஹமாஸ் தெரிவித்துள்ளது.  அதே போல் ஹமாஸ் ராணுவக் கட்டமைப்புகள் மீது போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.  

காஸாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க அகதிகள் முகாமான அல்-ஷட்டி பகுதியின் குடியிருப்புப் பகுதியில் பல தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக  காஸா குடிமை பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.  அல்-துஃபா பகுதியில் உள்ள பல வீடுகளை குறிவைத்து மற்றொரு தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹமாஸ் நடத்தும் அரசு ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது. புழுதி மற்றும் குப்பைகள் நிறைந்த சாலையில் காயமடைந்தவர்களை மக்கள் சுமந்து செல்கின்றனர். இது குறித்த வீடியோக்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.   


காஸா நகரின் குடிமை பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர்  " காஸாவின் முழு பகுதியும் குறிவைக்கப்பட்டது, வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன. பல குடும்பங்கள் இன்னும் இடிபாடுகளில் புதைந்துள்ளன," எனக் கூறியுள்ளார்.  "காயமடைந்தவர்களில் சிலர் பாப்டிஸ்ட் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர், மேலும் இடிபாடுகளுக்கு அடியில் புதையுண்டவர்களைத் தேடும் பணிகளும் நடைபெற்று வருகிறது. ஆம்புலன்ஸ்களுக்கான உபகரணங்கள் மற்றும் எரிபொருள் பற்றாக்குறையால் நிலைமை மிகவும் படுமோசமாக உள்ளது" எனக் கூறியுள்ளார்.  காஸாவில் ஹமாஸின் உயர்மட்ட தளபதி ராத் சாத்-ஐ கொல்ல இஸ்ரேலிய ராணுவம் முயற்சி செய்ததாக  இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில், லெபனானுக்குள் வான்வழித் தாக்குதலில் ஹமாஸின் மூத்த உறுப்பினரையும் அல் ஜமால் அல் இஸ்லாமியாவுடன் தொடர்புடைய உறுப்பினரையும் கொன்றதாக இஸ்ரேல் கூறியுள்ளது. 

அக்டோபர் 7ல்  இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர் , 251 பேர் காஸாவிற்கு பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதற்குப் பிறகு தொடங்கிய காஸா மீதான இஸ்ரேலிய தாக்குதலில் இதுவரை 37,551 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ்  சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் இறுதி வரை  14,680 குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக போர்க்கள தகவல்கள் தெரிவிக்கின்றனர்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!