உளவுப்படை விமானம் கடலில் மூழ்கி கோர விபத்து..  !!

 

அமெரிக்க உளவு விமானம் கடலில் மூழ்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்க ராணுவத்தின் கடற்படை கண்காணிப்பு உளவு விமானமான போயிங் பி8 போஸிடான் என்ற விமானம், கடற்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்காணிக்கவும், தாக்கவும் பயன்படுத்தப்படுகிறது. மேலும், இது தவிர உளவுத்துறை தகவல்களை சேகரித்து ராணுவத்திற்கு வழங்கி வருகிறது.

இந்நிலையில் இந்த கடற்படை விமானம், ஹவாய் மரைன் கார்ப்ஸ் பேஸ்ஸின் ஓடுபாதையில் இருந்து புறப்பட்டு சென்றது. அப்போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் கனோஹே விரிகுடாவில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் ஒன்பது விமானப்படை வீரர்கள் இருந்துள்ளனர். இருப்பினும் உயரிய தொழில்நுட்ப வசதி கொண்ட விமானம் என்பதால் அதில் பயணித்த அனைவரும் சிறிய காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளனர்.

மேலும் தற்போது அந்த 9 விமானப்படை வீரர்களும் பத்திரமாக கரையை அடைந்ததாக அமெரிக்க உளவுப்படை தெரிவித்துள்ளது. விபத்துக்குள்ளான அந்த விமானம் கடலில் மூழ்கியதாகவும் அமெரிக்க மரைன் கார்ப்ஸ் செய்தித் தொடர்பாளர் கன்னெரி சார்ஜென்ட் ஆர்லாண்டோ பெரெஸ் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் உளவு விமானம் திடீரென விபத்துக்குள்ளானது அமெரிக்க உளவுப்படையை பதற வைத்துள்ளது.