undefined

5 ஆண்டுகளாக கோமாவில் இருந்த மகள்.. தாயின் செயலால் மீண்டும் பிழைத்த அதிசயம்.. !  

 

அமெரிக்காவின் மிச்சிகனை சேர்ந்த பெண் ஜெனிபர் ஃப்ளெவெல்லன். செப்டம்பர் 2017 இல் அவர் எதிர்பாராத ஒரு விபத்தை சந்தித்தார். இதன் விளைவாக, அவர் மீள முடியாத கோமா நிலைக்குச் சென்றுவிட்டார். 5 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தார்.

ஜெனிபரின் 60 வயதான தாய் பெக்கி மீன்ஸ், தனது மகளை மீட்க போராடி வருகிறார். ஊனமுற்ற வாகனத்தை வாங்குவதற்கும் அவரது வீட்டைப் புதுப்பிப்பதற்கும் உதவியாக GoFundMe நிதி திரட்டும் தொடங்கப்பட்டது.இந்த நிலையில், ஆகஸ்ட் 25, 2022 அன்று, அவர் தனது தாயின் நகைச்சுவையைப் கேட்டுக்கொண்டே சிரித்தப்படி எழுந்தார்.

பெக்கி, ``அவள் இதற்கு முன் செய்ததில்லை; அவள் சிரிப்பதால் அவள் முதலில் எழுந்தபோது எனக்கு பயமாக இருந்தது. அவளால் முழுமையாக எழுந்து பேசவும் முடியவில்லை. ஆனால் அவள் தலையசைத்தாள். சுயநினைவு திரும்பிய பிறகும் அவள் அயர்ந்து தூங்குகிறாள். மாதங்கள் செல்ல செல்ல அவள் வலுப்பெற்று எழ ஆரம்பித்தாள்.

எல்லா கனவுகளும் நனவாகும். இன்று என்னால் சொல்ல முடியும். எங்களைப் பிரித்த ஒரு மூடிய கதவு இன்று திறந்தது. திரும்பி வந்துவிட்டோம்” என்று மகிழ்ச்சியுடன் அவருடைய தாய் கூறினார்.ஜெனிபருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் ரால்ப் வாங், `இது மிகவும் அரிதானது. மீள முடியாத கோமாவில் இருந்து அவர் எழுந்திருப்பது மட்டுமல்லாமல், அவரது உடல்நிலையும் மேம்பட்டு வருகிறது. அத்தகைய சூழ்நிலையில், ஒன்று அல்லது இரண்டு சதவீத நோயாளிகள் எழுந்திருக்கும் நிலைக்கு முன்னேறலாம்," என்று அவர் விளக்கினார்.

ஜெனிபர் தன் மகன் ஜூலியனின் கால்பந்து விளையாட்டைப் பார்க்கச் செல்கிறாள். ஜெனிபரின் மகன் ஜூலியனுக்கு 11 வயது இருக்கும் போது அவர் கோமா நிலைக்கு தள்ளப்பட்டார். தற்போது மகன் விளையாடுவதை பார்க்க மைதானத்திற்கு சென்றுள்ளார். இந்த செய்தி மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.