undefined

அதிர்ச்சி.. தனியாக வசித்து வந்த பெண் கொடூர கொலை.. தீவிர விசாரணையில் போலீசார்.!

 

எட்டப்பாடி அருகே தனியாக வசித்து வந்த பெண்ணை தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் எடைப்பாடி அருகேயுள்ள இருப்பாளி ஊராட்சி குறுக்கப்பட்டி  பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம் மனைவி பெருமாயி (55). பேச முடியாத ஊனமுற்றவர். மாணிக்கம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

அவர் திருமணமானவர். இதனால் வீட்டில் பெருமாயி மட்டும் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை பெருமாயி தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் வீட்டில் பிணமாக கிடந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பூலாம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரலேகா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பெருமாயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எட்டப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சங்ககிரி டிஎஸ்பி ராஜா சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். சேலத்தில் இருந்து வந்த தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.

சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்ட மோப்ப நாய் சிறிது தூரம் ஓடி போய் நின்றது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சொத்து தகராறு காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது தவறான உறவில் நடந்ததா? என்ற கோணங்களில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்