undefined

20 பவுன் நகை, 15 லட்சத்துடன் மனைவிக்கு 2வது திருமணம்!! கணவர் போஸ்டர் அடித்து அமர்க்களம்!! 

 

விழுப்புரம் தக்காதெருவில் வசித்து வருபவர் வெங்கடேசன். இவருக்கும் கோலியனூரில் வசித்து வரும்  விஜிக்கும்  2017ல் திருமணம் நடந்தது.  கடந்த சில மாதங்களாக   கணவன்,  மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக 2021ல்  விஜி,  வெங்கடேசனை பிரிந்துசென்று கோலியனூரில் வசித்து வரும்  கன்னியப்பனை 2வது திருமணம் செய்துகொண்டார்.  

வெங்கடேசன் மனைவி விஜி மீது குற்றம்சாட்டி கோலியனூர், விழுப்புரம் பகுதியில் போஸ்டர்களை அச்சடித்து ஒட்டியுள்ளார். அந்த போஸ்டரில் திருமணத்தில்  விஜியுடன் சேர்ந்து இருவரும் ஒன்றாக எடுத்த புகைப்படங்களை  வைத்து முக்கிய அறிவிப்பு எனக் குறிப்பிட்டுள்ளார்.  

அதில் 
முக்கிய அறிவிப்பு, என்னுடன் வாழ்ந்து வந்த விஜி, 20 பவுன் நகை, 15 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு சென்று இன்னொருவருடன் வாழ்ந்து வருகிறார் என   அச்சடித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இதனால் மனவேதனைக்கு உள்ளான விஜி வளவனூர் போலீஸில் புகார் அளித்துள்ளார். இதன் பேரில் வெங்கடேசன் மீது வளவனூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை