undefined

 அதிர்ச்சி... திருமண நாளில் மணமகன் தற்கொலை!   

 
 

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில்  திருமண நாளில் மணமகன் தற்கொலைச் செய்து கொண்டது பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மலப்புரம் கும்மினிபரம்பைச் சேர்ந்தவர் ஜிபின் (30). ஜிபினுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு, பத்திரிக்கை அடித்து, உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பத்திரிக்கை கொடுக்கப்பட்ட நிலையில், திருமண தினத்தன்று மண்டபத்தின் கழிவறைக்குள் நுழைந்த ஜிபின், நீண்ட நேரமாகியும் வெளியில் வரவில்லை. 

இதனால் பதற்றமடைந்த அவரது உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, ஜிபின் மணிக்கட்டு அறுக்கப்பட்ட நிலையில் காணப்பட்டார். உடனடியாக அவரை கொண்டோட்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு கூறினார்கள். 

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கரிப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த ஜிபின் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துள்ளார். அவருக்கு கடன் தொல்லைகள் எதுவும் இல்லை என்றும், வீட்டிலும் குடும்பத்தினரிடமும் எந்த மனவருத்தமும் இல்லை என்றும், திருமணத்திற்கு அவர் சம்மதத்தின் பின்னரே ஏற்பாடுகள் செய்யப்பட்டன என்றும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.ஜிபின் மரணத்திற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று போலீசார் கூறினர்

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை