கவர்மெண்ட் வேல தான் நிரந்தரம்... கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்து அரசு வேலையில் சேர்ந்த இளம்பெண்!

 

கவர்மெண்ட் வேல தான் காலகாலத்துக்கும் சோறு போடும். வயசானாலும் பணம் வரும். பாதுகாப்பு தரும் என்கிற நம்பிக்கை இன்றளவிலும் மக்களிடையே இருந்து வருகிறது. இந்நிலையில், மாநில அரசு வேலைக்காக இளம்பெண் ஒருவர், தான் வகித்து வந்த ஒன்றிய கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கூட்டம், புதுக்கோட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய கூட்டரங்கில் தலைவர் வசுமதி அம்பாசங்கர் தலைமையில் நடைபெற்றது. 

இதில் ஒன்றிய குழு துணை தலைவர் ஆஸ்கர், ஆணையர் ஹெலன் பொன்மணி, வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 66 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தின் போது, 12வது வார்டு ஒன்றியக்குழு கவுன்சிலர் நர்மதா, தனது பதவியை ராஜினாமா செய்தார். அப்போது பேசிய அவர், தனக்கு அரசு பணி கிடைக்க இருப்பதாகவும், அதற்காக ஒன்றிய கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்வதாகவும் அவர் தெரிவித்தார். பின்னர் அவரது ராஜினாமா ஏற்றுக்கப்பட்டது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!