டயர் கழன்று ஓடி தாறுமாறாக சென்ற அரசுப்பேருந்து... அலறி துடித்த பயணிகள்!  

 


அரசுப்பேருந்துகள் சரியான பராமரிப்பு இல்லாமல் திடீர் திடீரென பழுதாகி நடுவழியில் நின்று விடுவது தினசரி செய்தியாகி வருகிறது. மழை நேரங்களில் பேருந்துக்குள் மழை...,வெயில் நேரங்களில் நேரடி சூரிய வெளிச்சம் இவை எல்லாமே பழக்கமான ஒன்றாகிவிட்டது. அந்த வகையில் குமரியில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் டயர் கழன்று ஓடியது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அச்சத்தில் அலறி கூச்சலிட்டனர்.  குமரி மாவட்டம் பனச்சமூட்டில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி பயணிகளை ஏற்றி வந்த அரசு பேருந்து குழித்துறைக்கு  வந்த போது பின் சக்கர போல்டு நட்டுகள் தானாக கழன்று பேருந்து தாறுமாறாக ஓடியது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


குமரி மாவட்டத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துகள் அனைத்தும் முறையான பராமரிப்பு இல்லாமல் இயக்கப்படுவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நடந்து வருவதாக தொடர் குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது. இந்நிலையில் மார்த்தாண்டம் பணிமனையில் இருந்து  பனச்சமூடு பகுதிக்கு அரசு பேருந்து சென்றது. அங்கு  பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட ஏராளமான பயணிகளை ஏற்றிக்கொண்டு மார்த்தாண்டம் நோக்கி வந்த போது  பேருந்தின் பின்பக்க சக்கரத்தின் போல்டு நட்டுகள் தானாக கழன்று  பேருந்து தாறுமாறாக ஓடத் தொடங்கியது.  


இதில் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் சத்தம்போட்டு கத்தி கூச்சலிட பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநர் சாதுர்யமாக செயல்பட்டு பேருந்தை சாலையின் நடுவே பாதுகாப்பாக நிறுத்திவிட்டார்.  இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு பேருந்தில் பயணம் செய்தவர்கள் அனைவருமே  பாதுகாப்பாக இறக்கி விடப்பட்டனர். அதே நேரத்தில் இந்த பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டு இருந்தால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு இருக்கலாம் என பொதுமக்கள் கவலை தெரிவித்தனர். அத்துடன்  மாவட்டத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துகளை முறையாக பராமரித்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!